இலங்கைக்கு சீன ஜனாதிபதியின் சுதந்திர தின வாழ்த்து செய்தி!

70ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் இலங்கையிக்கு சீன ஜனாதிபதி ஸீ ஜின்பிங் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு விசேட வாழ்த்துச் செய்தியொன்றை அனுப்பியுள்ளார்.
அந்த வாழ்த்துச் செய்தியில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது,
சீனாவுக்கும் இலங்கைக்குமிடையிலான நீண்டகால நட்புறவு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமைத்துவத்தில் மிகவும் சிறப்பான நிலையில் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இரு நாடுகளுக்குமிடையிலான உறவுகளை எதிர்காலங்களில் இரு நாட்டு மக்களுக்கும் நன்மை பயக்கும் வகையில் பலப்படுத்துவதற்கு எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டுள்ள சீன ஜனாதிபதி, 70ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
Related posts:
இலங்கை - பாகிஸ்தானிற்கு இடையிலான ஒரு நீடித்த நட்பு நூல் வெளியீடு!
இந்தியாவின் நுழைவாயிலாக மாறும் யாழ்ப்பாணம்!
அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக எவரும் குண்டுகளை வெடிக்கச் செய்ய மாட்டார்கள் – பாதுகாப்பு அமைச்சின் செ...
|
|