இலங்கைக்கு கிழக்காக 300 கிலோமீற்றர் தொலைவில் நில அதிர்வு!
Friday, June 18th, 2021
இந்து சமுத்திரத்தில் இலங்கைக்கு கிழக்காக 300 கிலோமீற்றர் தொலைவில், ஆழ்கடல் பகுதியில் நில அதிர்வொன்று பதிவாகியுள்ளது.
அத்துடன் குறித்த அதிர்வு ரிக்டர் அளவீட்டு கருவியில் 4.8 மெக்னிடியூட்டாக பதிவாகியுள்ளது.
சுமார் 50 கிலோமீற்றர் ஆழ்கடல் பகுதியில் இந்த நில அதிர்வு பதிவாகியுள்ளதாக நில அதிர்வு மற்றும் இயற்கை அனர்த்தம் தொடர்பில் தெளிவுபடுத்தும், வோல்கெனோ டிஸ்கவரி என்ற இணையத்தளம் தெரிவித்துள்ளது.
எனினும், மட்டக்களப்பு, கல்முனை, அம்பாறை, ஏறாவூர் ஆகிய பகுதிகள் இந்த நில அதிர்வை உணரக்கூடிய பிரதேசங்களாக குறிப்பிடப்பட்டுள்ளன.
எனினும், குறித்த பகுதிகளில் இந்த அதிர்வு உணரப்பட்டதாக எவ்வித தகவல்களும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
இந்து சமுத்திரத்தில் சுதந்திர கடற்போக்குவரத்து மாநாட்டுக்கு தயார் - பிரதமர்!
எதிர்காலத்தில் மின் துண்டிப்பு இடம்பெறமாட்டாது - மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே அறிவிப்பு!
அனைத்து வாகனப் பதிவு மற்றும் வாகனப் பரிமாற்றத்திற்கும் வருமான வரி இலக்கம் அவசியம் - மோட்டார் போக்குவ...
|
|
|


