இலங்கைக்கு கடன் அற்ற உதவிகளை வழங்க ஜப்பான் நடவடிக்கை!

Thursday, March 15th, 2018

நாட்டின் அபிவிருத்திக்கு ஒத்துழைப்பு வழங்கும் போது பெரும்பாலும் கடன் அற்ற உதவிகளை வழங்க நடவடிக்கை எடுப்பதாக ஜப்பானின் பிரதமர் சின்சோ அபே தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜப்பானுக்கான விஜயத்தை மேற்கொண்டு அந்த நாட்டின் பிரதமரை சந்தித்த போதே அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

இதேவேளை ஜப்பான், இலங்கையின் சக்திவள உற்பத்தி துறை, அதிவேக நெடுஞ்சாலை அமைப்பு, உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தல் போன்ற விடயங்களுக்கும் உதவியளிக்கும் என்றுஅவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்த சந்திப்பின் போது இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையில் சுகாதார சேவை அபிவிருத்திக்கான உடன்படிக்கை ஒன்றும் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

Related posts:


இரண்டாவது தடவையாகவும் நெடுந்தீவு பிரதேச சபை உதவித்தவிசாளர் தெரிவு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கொரோனா என்னும் தீமையை அழிப்பதற்கும் ஒரு கிருஷ்ண பரமாத்மா வருவார் - தீபவளி வாழ்த்துச் செய்தியில் யாழ்...
பல வருடங்களாக பயன்படுத்தப்படாத 23 இலட்சம் வாகனங்களை தடை செய்ய மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தீர்...