இலங்கைக்குள் கொரோனா வைரஸ் பரவல் இன்னும் உச்சத்தை நெருங்கவில்லை – அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் மருத்துவர் ஹரித அளுத்கே எச்சரிக்கை!
Wednesday, April 22nd, 2020
கொரோனா வைரஸ் ஆபத்து முடிவுக்கு வந்துள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியானாலும் இலங்கைக்குள் கொரோனா வைரஸ் பரவல் இன்னும் உச்சத்தை நெருங்கவில்லை என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் மருத்துவர் ஹரித அளுத்கே எச்சரித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொடர்பாக தற்போதுள்ள நிலைமைக்கு அமைய எவ்வித எதிர்வுகூறல்களையும் முன்வைக்க முடியாது என தெரிவித்த மருத்துவர் ஹரித அளுத்கே கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என அரச அதிகாரிகள் அறிவித்து மறுநாள் இலங்கையில் அதிகளவான நோயாளிகள் அடையாளம் காணப்பட்டனர் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்..
அத்துடன் அரசாங்கம் நாட்டில் ஆபத்தான பிரதேசம், கூடுதல் ஆபத்தான பிரதேசம், ஆபத்து குறைந்த பிரதேசம் என வேறுப்படுத்திய சில பிரதேசங்களில் ஊரடங்குச் சட்டத்தை நீக்கியுள்ளது. இதுவும் அபாயகரமானதாக அமைந்து விடலாம் எனவும் ஹரித அளுத்கே சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன் அரசாங்கம் தினமும் மேற்கொண்டு வரும் பரிசோதனை எண்ணிக்கை தொடர்பில் திருப்தியடைய முடியாது. சில முன்னேற்றமடைந்த ஆபிரிக்க நாடுகள் கூட தினமும் இலங்கையை விட அதிகளவான பரிசோதனைகளை மேற்கொண்டு வருகின்றன. இலங்கைக்கு இணையான சனத்தொகையை கொண்ட வியட்நாம் இலங்கையை விட 24 மடங்கு அதிகமான பரிசோதனைகளை நடத்துகிறது என சுட்டிக்காட்டிய வைத்தியர் ஹரித அளுத்கே கொரோனா வைரஸ் தொற்றியுள்ளவர்களை அடையாளம்காண இந்த நாடுகள் நடத்தும் பரிசோதனைகளை அதிகரித்துள்ளதன் காரணமாகவே அவை இதில் வெற்றி பெற்றுள்ளன எனவும் குறிப்பிட்டுள்ளார்
Related posts:
|
|
|


