இலங்கைக்கான சீனத் தூதுவர் – சபாநாயகர் இடையே விசேட சந்திப்பு!
Friday, August 27th, 2021
இலங்கைக்கான சீனத் தூதுவர் ஷீ சென்ஹொங், மரியாதையின் நிமித்தம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இதன்போது கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்தும் செயற்பாட்டுக்கு, முழுமையான ஒத்துழைப்பை இலங்கை அரசாங்கத்துக்கு சீன அரசாங்கம் தொடர்ந்து வழங்கும் என சீனத் தூதுவர் தெரிவித்துள்ளார்.
மேலும், இரு நாடுகளுக்குமிடையில் பொருளாதாரம், நிதி ஒத்துழைப்பு மற்றும் நாடாளுமன்ற நட்புறவை பலப்படுத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இலங்கையின் நீண்டகால நட்பு நாடு என்ற ரீதியில் சீன அரசாங்கம் தொடர்ச்சியாக வழங்கிவரும் ஒத்துழைப்புகளுக்கு சபாநாயகர் தனது நன்றியைத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது..
000
Related posts:
விழா மண்டபங்களின் கொள்ளளவில் 50 சதவீத விருந்தினரை அனுமதித்து நிகழ்வுகளை நடத்த அனுமதிக்குமாறு இலங்கை ...
புரிந்துணர்வு மற்றும் நம்பிக்கையுடன் ஒன்றுபட வேண்டும் - உலக நாடுகளுக்க ஜனாதிபதி அழைப்பு!
இலங்கையின் பொருளாதார நிலைமையை மதிப்பீடு செய்வதற்கு நாளை இந்தியாவிலிருந்து வருகிறது விசேட தூதுக்குழு!
|
|
|


