அரசியல் பேசி நோக்கத்தை குழப்பாதீர்கள் – சி.வி.க்கு ஜோன்ஸ்ரன் சாட்டை!

Friday, November 6th, 2020

அதிகாரங்களை பறித்தெடுக்கும் நோக்கம் அரசாங்கத்திற்கு இல்லை என்று நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்ரன் பெனான்டோ திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

யாழ். செயலகத்தில் இன்று (06.11.2020) நடைபெற்ற கிராமிய பொருளாதாரத்தினை மேம்படுத்துவதற்கான தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் ஓர் அங்கமான கிராமிய உட்கட்டமைப்பு வசதிகள்  அபிவிருத்திக் குழுவின் கலந்துரையாடலின் போதே நெடுஞ்சாலைகள் அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இன்றைய கலந்துரையாடலில் பங்கு பற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி. விக்னே]ஸ்வரன், தமிழர் பிரதேசங்களில் மத்திய அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படுகின்ற அபிவிருத்தி திட்டங்கள், உள்ளூராட்சி மன்றங்களுக்கும் மாகாண சபைக்கும் அதிகாரங்களை மீளப் பெறுவதற்கான வேலைத் திட்டமாக இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்படுவதாக தெரிவித்தார்.

இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர் ஜோன்ஸ்ரன் பெர்னான்டோ, பிரதேசத்தின் அபிவிருத்தியை நோக்கமாக கொண்டே குறித்த வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப் படுவதாகவும் கூட்டத்தின் நோக்கத்தினை திசை திருப்ப வேண்டாம் எனவும் தெரிவித்தார்.

மேலும், பிரதேசங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை பறித்தெடுக்கும் அல்லது வலுவிழக்கச் செய்யும் எந்தவிதமான நோக்கமும் அரசாங்த்திற்கு கிடையாது எனவும் திட்டவட்டமாக தெரிவித்தார்.

Related posts:

புதிதாக கண்டறியப்பட்ட உருதிரிபடைந்த கொரோனா வைரஸ் தீவிரமாக பரவக்கூடியது – பொது சுகாதார பரிசோதகர் சங்க...
நாட்டின் கடல் எல்லைக்குள் நுழையும் கப்பல்களில் இருந்து எண்ணெய் கசிவு ஏற்படுகிறதா என்பதை கண்காணிக்க ப...
துமிந்த சில்வாவுக்கு வழங்கப்பட்ட மன்னிப்பு தவறானது - தண்டனையை மீண்டும் நிறைவேற்றுமாறு சிறைச்சாலை ஆணை...

அமைச்சர் டக்ளஸ் பணிப்புரை – கிளிநொச்சியில் வீதி விபத்துக்களை தடுக்கும் நடவடிக்கை நடைமுறையில்!
பண்டிகைக் காலத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலையை குறைப்பதற்கு எதிர்பார்ப்பு - வர்த்தக அமைச்சர் ந...
உரிய ஒப்பந்தங்கள் இல்லாத நிறுவனங்கள் - தரமற்ற மருந்துகளை வழங்கும் நிறுவனங்கள் கறுப்புப் பட்டியலில் இ...