இலங்கையின் பொருளாதார நிலைமையை மதிப்பீடு செய்வதற்கு நாளை இந்தியாவிலிருந்து வருகிறது விசேட தூதுக்குழு!

Wednesday, June 22nd, 2022

இந்திய அரசாங்கத்தின் வெளிவிவகார செயலாளர் உள்ளிட்ட விசேட தூதுக்குழுவினர் நாளை (23) இலங்கைக்கு அவசர விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த விசேட தூது குழுவில் இந்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் ஆனந்த நாகேஸ்வரனும் அடங்குவார்.

அக்குழுவினர் ஜனாதிபதி மற்றும் பிரதமருடனும் கலந்துரையாடவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நாட்டின் பொருளாதார நிலைமையை மதிப்பீடு செய்வதே இவர்களது விஜயத்தின் பிரதான நோக்கம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மூன்று மணித்தியாலங்கள் மாத்திரம் நாட்டில் தங்கியிருக்கும் குறித்த தூதுக்குழுவினர் விசேட விமானம் மூலம் இலங்கை வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முன்பதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மற்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் கடந்த இரண்டு நாட்களுக்கு இலங்கைத் தூதுவரை சந்தித்து பேசியிருந்தனர்.

இதேவேளை இலங்கைக்கு எரிபொருள் கொள்வனவிற்காக 500 மில்லியன் டொலர் மற்றொரு கடனுதவியை வழங்கவும் இந்தியா நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: