இலங்கைக்கான ஒருங்கிணைந்த கடன் மறுசீரமைப்புக்கு வரவேற்கின்றது ஜப்பான்!

Sunday, May 7th, 2023

இலங்கைக்கான ஒருங்கிணைந்த கடன் மறுசீரமைப்பு திட்டத்தை ஜப்பானின் நிதியமைச்சர் வரவேற்றுள்ளதாக ஜப்பானிய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையின் இருதரப்புக் கடன் வழங்குநர்களுக்கான ஒருங்கிணைந்த கடன் மறுசீரமைப்புத் திட்டம் அண்மையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதன்போது ஜப்பான், இந்தியா மற்றும் பிரான்ஸ் ஆகியவை செயல்முறையின் ஆரம்பத்தை அறிவித்துள்ளன.

இந்தநிலையில் எதிர்கால கடன் நெருக்கடிகளைத் தடுக்க கடன் தரவு வெளிப்படைத்தன்மை மற்றும் துல்லியத்தை மேம்படுத்துவது அவசியம் என்று ஜப்பானிய அமைச்சர் சுனிச்சி சுசுக்கி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts:


கோணாவில் யூனியன் குளப்பகுதி விவசாயிகளுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஊடாக நியாயமான தீர்வு பெற்றுத்தர...
பிம்ஸ்டெக் அமைப்பின் 24 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் விடுத்துள்ள வ...
யாழ்ப்பாணத்திலும் ஒரேநாளில் கடவுச்சீட்டை விநியோகிக்க நடவடிக்கை - அமைச்சர் தம்மிக்க பெரேரா !