இறுதி அழிவு நெருங்கிக்கொண்டிருக்கிறது – ரஷ்யாவின் முன்னாள் ஜனாதிபதி எச்சரிக்கை!

Tuesday, June 14th, 2022

உக்ரைனுக்கு அமெரிக்கா ஆயுதங்கள் வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், ரஷ்யாவின் முன்னாள் ஜனாதிபதியாக இருந்தவர், இறுதி அழிவு நெருங்கிக்கொண்டிருக்கிறது என்று கூறி எச்சரித்துள்ளார்.

2008ஆம் ஆண்டு முதல் 2012ஆம் ஆண்டு வரை ரஷ்யாவின் ஜனாதிபதியாக இருந்தவர் டிமிட்ரி மெத்வதேவ் (56).

ஜனாதிபதி பதவியிலிருக்கும்போது புடினை விட மென்மையாக செயல்பட்டவர் என்று கூறப்படும் டிமிட்ரி மெத்வதேவ், இப்போது காரசாரமான கருத்துக்களை தெரிவித்துவருகிறார்.

இதன்படி, அமெரிக்கா வழங்கும் ஏவுகணைகளை உக்ரைன் பயன்படுத்தினால் மொஸ்கோ மேற்கத்திய நகரங்களை தாக்கும் என ரஷ்யாவின் முன்னாள் ஜனாதிபதி டிமிட்ரி மெத்வதேவ் எச்சரித்துள்ளார்.

அழிவு நெருங்கிவிட்டது என்னும் பொருளில், இறுதி அழிவின் குதிரை வீரர்கள் ஏற்கனவே புறப்பட்டுவிட்டார்கள் என்று கூறி மேற்கத்திய நாடுகளுக்கு டிமிட்ரி மெத்வதேவ் மிரட்டல் விடுத்துள்ளார்.

எவ்வாறாயினும், டிமிட்ரி மெத்வதேவ் ரஷ்ய ஜனாதிபதி பதவிக்கு அடிபோடுகிறார் என ரஷ்யாவின் முன்னாள் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான Dmitry Gudkov தெரிவித்துள்ளார்.

புடின் பதவியிலிருந்து அகற்றப்பட்டால், அந்த இடம் தனக்கு கிடைக்கும் என அவர் எண்ணுவதால்தான் டிமிட்ரி மெத்வதேவ் இப்படியெல்லாம் செய்வதாக அவர் தெரிவிக்கிறார்.

000

Related posts:

கலை என்பது சமகாலத்தை, சமூகத்தின் நடப்பியலை உணர்த்துகின்ற உயிர்ப்பு மையம் : ஓய்வு நிலைப் பிரதிக் கல்வ...
பொதுத்தேர்தலை கட்டம் கட்டமாக நடத்துவது குறித்து ஆலோசனை - தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப...
மத்திய வங்கி அதன் ஊழியர்களுக்கு மேற்கொண்ட சம்பள அதிகரிப்பை திருத்தம் செய்ய சிரேஷ்ட முகாமைத்துவ அதிகா...