இறக்குமதி செய்யப்படும் பால்மா விலையை அதிகரிக்க கோரிக்கை!

Saturday, June 13th, 2020

இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலையை அதிகரிப்பதற்கு பால்மா நிறுவனங்கள், நுகர்வோர் அதிகார சபையிடம் கோரியுள்ளன.

டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி அடைந்துள்ளமையினால் ஏற்பட்டுள்ள நட்டத்தை தவிர்ப்பதற்காக இந்தக் கோரிக்கை முன்வைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறிப்பினும், பால்மா நிறுவனங்களின் கோரிக்கைக்கு அனுமதி வழங்கப்படவில்லை என நுகர்வோர் அதிகார சபையின் தலைவர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சாந்த திஸாநாயக்க எமது செய்திச் சேவையிடம் தெரிவித்தார்.

Related posts: