இறக்குமதி கட்டுப்பாடுகளை குறைக்கும் வகையில் நிவாரணம் வழங்குமாறு பிரதமர் அறிவுறுத்து!
Thursday, September 30th, 2021
அத்தியவசியமற்ற பொருட்கள் மற்றும் கருவிகளுக்கு இதுவரை விதிக்கப்பட்டுள்ள இறக்குமதி கட்டுப்பாடுகளை முடிந்தளவிற்கு குறைக்கும் வகையில் நிவாரணம் வழங்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலிற்கு அறிவுறுத்தியுள்ளார்.
அத்தியவசியமற்ற பொருட்கள் மற்றும் கருவிகளுக்கு இதுவரை விதிக்கப்பட்டுள்ள இறக்குமதி கட்டுப்பாடுகள் காரணமாக வர்த்தகர்களும் பொதுமக்களும் எதிர்கொண்டுள்ள சிரமங்களை கருத்தில் கொண்டு பிரதமர் இவ்வாறு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
அதற்கமைய மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் இது தொடர்பில் தீர்வை முன்வைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
இலங்கைக்கு இந்தியாவின் நட்புறவிலான உதவிகள்!
சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுவதில் ஆசிரியர்கள் முன்மாதிரியாகச் செயற்படவேண்டும் - வடக்கு மாகாண கல்வி...
இலங்கையின் சுற்றுலா மறுமலர்ச்சி பயணத்தில் இந்தியா முன்னணிப் பங்காளியாக உள்ளது - கொழும்பிலுள்ள இந்திய...
|
|
|


