இறக்குமதி அரிசியை ரூ 76 இலும் அதிகமாக விற்க தடை -ஜனாதிபதி!

நாட்டில் இறக்குமதி செய்யப்படும் அரிசியின் ஒரு கிலோ கிராமிற்கான விலையை ரூபா 76 இற்கு மேல் விற்பனை செய்ய முடியாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
வரட்சி காரணமாக அவதியுற்றுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பில் நியமிக்கப்பட்ட விசேட ஜனாதிபதி செயலணியுடன் இன்று (20) பிற்பகல் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
வர்த்தகர்களும் அரிசி ஆலை உரிமையாளர்களும் தாம் விரும்பியவாறு அரிசி விலையை அதிகரிக்க முடியாது என்பதோடு, இதன் மூலம் மக்களை அசௌகரியங்களுக்குள்ளாவதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
இதேவேளை அரசாங்க களஞ்சியசாலைகளுக்கு அனுப்பப்பட்டுள்ள நெல், அரிசியாக மாற்றப்பட்டு சந்தைக்கு அனுப்பப்பட்டுள்ளதா என்பது தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறு, ஜனாதிபதி நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு அறிவுறுத்தினார்.அத்துடன், இறக்குமதியின் போது நுகர்வுக்கு பொருத்தமான அரிசியை இறக்குமதி செய்வது தொடர்பில் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என செயலணியை ஜனாதிபதி அறிவுறுத்தினார்.
Related posts:
|
|