இரு வாரங்களில் 7 ஆயிரத்திற்கும் அதிகமானோர் வருகை – நாட்டின் சுற்றுலாத்துறை மீண்டு இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதாக துறைசார் அமைச்சர் தெரிவிப்பு!
Monday, October 18th, 2021
ஒக்டோபர் மாதத்தின் முதல் இரண்டு வாரங்களுக்குள் 7 ஆயிரத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளதாக சுற்றுலா அமைச்சு தெரிவித்துள்ளது.
கொரோனா பரவல் காரணமாக வீழ்ச்சியடைந்திருந்த சுற்றுலாத்துறை தற்போது படிப்படியாக மீண்டு இயல்பு நிலைக்கு வருகிறது என்று அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி, இந்த ஆண்டு ஜனவரிமுதல் மொத்தம் 45 ஆயிரத்து 413 சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.
அவர்களில் 7 ஆயிரத்து 96 பேர் ஒக்டோபர் 01 முதல் ஒக்டோபர் 13 ஆம் திகதி வரை நாட்டிற்கு வந்துள்ளனர்.
குறிப்பாக இந்தியா, கஸகஸ்தான், ஜெர்மனி, உக்ரைன், அமெரிக்கா, சீனா, கனடா, பிரான்ஸ் மற்றும் ரஷ்யாவைச் சேர்ந்தவர்களே இவ்வாறு நாட்டிற்கு வருகைத் தந்துள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேநேரம் பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதால், அதிக சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருவதற்கான சாத்தியம் அதிகரித்து வருவதாக சுற்றுலாத் துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
அத்துடன் அடுத்த இரண்டு மாதங்களுக்குள் நாட்டிற்கு அதிக சுற்றுலா பயணிகளை ஈர்க்க தேவையான விளம்பர திட்டங்கள் செயற்படுத்தப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|
|


