இரு மடங்கில் அதிகரித்தது அப்பியாச கொப்பிகளின் விலைகள் – இலங்கை சிறு கைத்தொழில் சங்கத்தின் தலைவர் கவலை!

Sunday, September 11th, 2022

இலங்கையில் அப்பியாச கொப்பிகளின் விலைகள் 200 வீதத்தால் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை சிறு கைத்தொழில் சங்கத்தின் தலைவர் நிருக்ச குமார தெரிவித்துள்ளார்.

நாட்டில் காகித தட்டுப்பாடு நிலவுவதன் காரணமாகவே இவ்வாறு அப்பியாச கொப்பிகளின் விலைகள் அதிகரித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கமைய, 120 ரூபாவாக இருந்த 120 பக்க கொப்பிகளின் விலை தற்போது 225 ரூபாவாக அதிகரித்துள்ளது.

அதேவேளை, 75 ரூபாய்க்கு விற்கப்பட்ட 80 பக்க கொப்பிகளின் விலை தற்போது 180 ரூபாவாகவும், 65 ரூபாய்க்கு விற்கப்பட்ட 40 பக்க கொப்பிகளின் விலை தற்போது 100 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகின்றது.

மேலும், 150 ரூபாவாக இருந்த 40 பக்கமுடைய சிஆர் புத்தகம் தற்போது 290 ரூபாவாக உயர்ந்துள்ள அதேவேளை 115 ரூபாய்க்கு விற்கப்பட்ட 40 பக்கமுடைய பாடப்புத்தகம் தற்போது 230 ரூபாவாக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: