இருபதுக்கு 20 உலகக் கிண்ண தொடர் – மேலதிகமாக 250 நிமிடங்களை ஒதுக்குவதற்கு சர்வதேச கிரிக்கெட் பேரவை தீர்மானம்!
Wednesday, May 15th, 2024
இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இரண்டாவது அரையிறுதி போட்டிக்கு, மேலதிகமாக 250 நிமிடங்களை ஒதுக்குவதற்கு சர்வதேச கிரிக்கெட் பேரவை மற்றும் மேற்கிந்திய கிரிக்கெட் சபை ஆகியன தீர்மானித்துள்ளன.
அதன்படி, இரண்டாவது அரையிறுதி போட்டிக்கு இடையூறு ஏற்படுமாயின், மறுநாள் குறித்த போட்டியை நடத்தாமல் ஒரே நாளில் நிறைவுசெய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
முதல் அரையிறுதி ஜூன் மாதம் 26 ஆம் திகதியன்று டிரினிடாட்டில் உள்ளூர் நேரப்படி இரவு 8.30 க்கு ஆரம்பமாகவுள்ளது.
டிரினிடாட்டில் மழை பெய்தால் குறித்த போட்டியை ஜூன் 27 ஆம் திகதி நடத்துவதற்கு, போட்டி ஏற்பாட்டாளர்கள் மேலதிகமாக ஒரு நாளை ஒதுக்கியுள்ளனர்.
அதேநேரம், கயானாவில் இடம்பெறவுள்ள இரண்டாவது அரையிறுதியை ஜூன் 27 ஆம் திகதி உள்ளூர் நேரப்படி காலை 10.30க்கு தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதே நாளில் போட்டியை முடிப்பதற்காக மேலதிகமாக 250 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
அதன்படி, இரண்டாவது அரையிறுதியை முடிப்பதற்கு நடுவர்கள் சுமார் எட்டு மணி நேரம் காத்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, ஜூன் 28 பயண நாளாகவும், ஜூன் 29 அன்று இறுதிப் போட்டியும் நடைபெறும் என சர்வதேச கிரிக்கெட் பேரவை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
|
|
|


