இராணுவ வீரர்களின் நினைவு தூபிக்கு ரஷ்யாவில் ஜனாதிபதி அஞ்சலி!

Friday, March 24th, 2017

ரஷ்யாவில் மொஸ்கோ நகருக்கு சென்றுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ரஷ்யாவின் பிரபல இராணுவ வீரர்களின் நினைவு தூபிக்கு மலர் அஞ்சலி செலுத்தியுள்ளார்.

நான்கு தசாப்தங்களுக்கு பின்னர் நடைபெறும் இலங்கை ஜனாதிபதி ஒருவரின் முதலாவது ரஷ்யாவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது. மொஸ்கோ நகரின் செஞ்சதுக்கத்தில் அலெக்சாண்டர் பூங்காவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த நினைவு தூபி இரண்டாவது உலக யுத்த காலத்தில் உயிர் நீத்த சோவியத் ஒன்றியத்தின் இராணுவ வீரர்களின் நினைவாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

செஞ்சதுக்கத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி  மொஸ்கோ நகரின் இராணுவ கட்டளையிடும் அதிகாரியினால் கௌரவமாக வரவேற்கப்பட்டதுடன், விசேட இராணுவ அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டது.

நினைவு தூபிக்கு ஜனாதிபதி மலர் அஞ்சலி செலுத்தினார்.ஜயந்தி சிறிசேன அம்மையார் உள்ளிட்ட இலங்கை தூதுக் குழுவினரும் இந்நிகழ்வில் பங்குபற்றினர்.

Related posts:


நிதி நிறுவனங்கள் கடன் வழங்குவதில்லை என்றால் அது தொடர்பில் கடன் தகவல் பணியகத்தில் அறிவிக்குமாறு பொது ...
டிசம்பர் மாதம் இறுதிக்குள் நலன்புரி கொடுப்பனவுகளுக்கு பொருத்தமானவர்களைத் தெரிவு செய்ய நடவடிக்கை நிறை...
மொழிப் பிரச்சினையை தீர்ப்பதற்கு இளைஞர்களின் கல்வி வளர்ச்சி அவசியம் - இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தல...