இராணுவத் தளபதி – கடற்படைத் தளபதி சந்திப்பு!
Tuesday, August 15th, 2017
இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மஹேஷ் சேனாநாயக்க மற்றும் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்தன ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இராணுவத் தளபதி நேற்று முன்தினம் கடற்படைத் தலைமையகத்திற்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். இராணுவத் தளபதி தமது கடமைகளைப் பொறுப்பேற்ற பின்னர் கடற்படைத் தலைமையகத்திற்கு விஜயம் செய்துள்ளார்.
இராணுவத் தளபதி மற்றும் கடற்படைத் தளபதி ஆகியோர் இதன்பேது முக்கிய கலந்துரையாடல்களில் ஈடுபட்டுள்ளனர். இருவருக்குமிடையிலான சந்திப்பில் தங்களது சேவைகள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக இராணுவத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சந்திப்பை நினைவுகூரும் வகையில் நினைவுச் சின்னங்களும் பரிமாறிக்கொள்ளப்பட்டுள்ளன.
Related posts:
நீதிபதி இளஞ்செழியனின் பெயரில் போலி பேஸ்புக்!!
உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை 20 வீதமாக குறைவடைவு!
எழுத்து மூலம் அறிவிக்கப்படுமாயின் மூன்று தடுப்பூசிகளையும் பெற்றவர்கள் மட்டுமே பொது போக்குவரத்தில் பய...
|
|
|


