இராணுவத்தில் 10 புதிய மேஜர் ஜெனரல்கள்!
Thursday, May 23rd, 2019
இராணுவத்தைச் சேர்ந்த 10 பிரிகேடியர் தர அதிகாரிகள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால், மேஜர் ஜெனரல்களாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.
பிரிகேடியர் கேஎம்ஆர்பி. கருணாதிலக, பிரிகேடியர் ஐஓடபிள்யூ. மடோல, பிரிகேடியர், பி.ஜே.கமகே, பிரிகேடியர் எச்பிஎன்கே. ஜெயபத்திரன, பிரிகேடியர் ஆர்கேபிஎஸ். கெற்றகும்புர, பிரிகேடியர் ஏஎஸ். ஆரியசிங்க, பிரிகேடியர் டபிள்யூடிசிகே. கோஸ்தா, பிரிகேடியர் பிஐ.பத்திரன, பிரிகேடியர் ஜிஎச்ஏஎஸ். பண்டார, பிரிகேடியர் பிபிஎஸ் டி சில்வா ஆகியே அதிகாரிகளே பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.
2019 மே 10ஆம் நாளில் இருந்து நடைமுறைக்கு வரும் வகையில் இவர்களுக்கு மேஜர் ஜெனரலாகப் பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டில் இராணுவத்தின் மூத்த அதிகாரிகளான மேஜர் ஜெனரல்கள் பலர் ஓய்வு பெற்றுள்ள நிலையிலேயே புதிதாக 10 மேஜர் ஜெனரல்கள் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.
Related posts:
57,000 பேரையும் அரச சேவையில் உள்ளீருங்கள் - வரும் 8 ஆம் திகதி பட்டதாரிகள் போராட்டம்!
மறு அறிவித்தல் வரும் வரை யாழ்.பல்கலைகழகத்தின் கற்றல் செயற்பாடுகள் நிறுத்தம் - பல்கலைக்கழக பதிவாளர் ...
அரசியலமைப்பு பேரவைக்கு நிமல் சிறிபாலவை பரிந்துரை செய்தார் ஜனாதிபதி!
|
|
|


