இரவுவேளைகளிலும் திறக்கப்படும் தெகிவளை மிருகக்காட்சிசாலை!

Wednesday, September 20th, 2017

தெகிவளை மிருகக்காட்சிசாலை வாரத்தில் 3 நாட்கள் இரவு வேளைகளில் திறந்திருக்கும் என்று தேசிய விலங்கியல் திணைக்களத்தின் பணிப்பாளர் தம்மிகா மல்சிங்க தெரிவித்துள்ளார்.

வெள்ளி , சனி, மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 7.30 முதல் 10.00 மணிவரையில் மிருகக்காட்சிசாலையை திறந்துவைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இரவுவேளைகளில் மிருகக்காட்சி சாலைக்கு வருவோர் பிளாஸ் வைத்து புகைப்படம் எடுப்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நடைமுறையை மீறுவோருக்கு எதிராக சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் திணைக்களத்தின் பணிப்பாளர் தம்மிகா மல்சிங்க மேலும் குறிப்பிட்டார்.

Related posts:

கிராமத்துடன் கலந்துரையாடல் வேலைத்திட்டத்தை வலுப்படுத்த 5 தேசிய இணைப்புக்குழுக்கள் - ஜனாதிபதி செயலணிய...
நாடாளுமன்றத் தேர்தலில் கலப்பு வாக்களிப்பு முறையை அறிமுகப்படுத்துவது தொடர்பில் அமைச்சரவையில் முன்வைக்...
யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் உற்பத்தி நிலையமொன்று முற்றுகை - கொழும்பில் இருந்து இரசாயன பகுப்பாய்வு ...