இரத்த பரிசோதனைக்கு வரும் அதிகாரிகளின் அடையாளங்களை உறுதிப்படுத்துமாறு கோரிக்கை!
Wednesday, May 10th, 2017
பரிசோதனைக்காக வரும் அதிகாரிகளை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டை அல்லது ஏனைய ஆவணங்களை பரிசோதிக்குமாறு சுகாதார பணிப்பாளர் ஜயசுந்தர பண்டார பொதுமக்களிடம் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.
வெவ்வேறு நோய்களை பரிசோதிப்பதற்காக பொதுமக்களிடம் இரத்த பரிசோதனை மேற்கொள்ள பலர் வீடுகளுக்கு வருவதாக இணையங்கள் ஊடாக போலி பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன
நாட்டிலிருந்து யானைக்கால் நோயினை முற்றாக ஒழிக்கும் பொருட்டு குறிப்பிட்ட சில பிரதேசங்களுக்கு சுகாதார அமைச்சின் அனுமதியுடன் சுகாதார அதிகாரிகள் இரத்த பரிசோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர் குறித்த இரத்த மாதிரி பரிசோதனைக்கு வரும் அதிகாரிகளின் அடையாளங்களை உறுதிப்படுத்தி அவர்களின் கடமைகளுக்கு ஒத்துழைப்பும் வழங்குமாறும் அவர் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்
Related posts:
இலங்கையில் அதி சொகுசு மோட்டார் வாகனம் அறிமுகம்!
முக்கிய பரீட்சைகளை நடத்துவதற்காக வழங்கப்படவுள்ள விடுமுறைகள் தொடர்பில் கல்வி அமைச்சு அறிவிப்பு!
நிதி நெருக்கடி காணப்படும் நடுத்தர வருமானம் ஈட்டும் நாடுகளுக்கு உதவுவதற்கான முறையான திட்டம் அவசியம் -...
|
|
|


