இரண்டு மாதங்களுக்குள் மருந்து தட்டுப்பாடு நிவர்த்திக்கப்படும் – சுகாதார அமைச்சர் அறிவிப்பு!

எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் மருந்து தட்டுப்பாட்டை முழுமையாக நிவர்த்தி செய்வதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
கண்டி – பல்லேகலையில் வைத்து ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அத்துடன், நியாயமான விலைக்கு மருந்துகளை விற்பனை செய்யும் நடவடிக்கைக்கும் செல்ல வேண்டும்.
இதேவேளை, மக்களை அசௌகரியத்துக்கு உள்ளாக்கி, அரசியல் நோக்கத்தை நிறைவேற்ற செயற்படும் சில தொழிற்சங்க செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த, 90 சதவீதமானோர் ஒத்துழைப்பு வழங்குவதை, சமூக ஊடகங்கள் வாயிலாக தாம் பார்ப்பதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
பல் அறுவைச் சிகிச்சை நிபுணர்களுக்கு 20 க்கும் மேற்பட்ட வெற்றிடங்கள் - மாகாண சுகாதார அமைச்சு !
மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களை இறக்குமதி செய்வது குறித்து அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச கவனம் !
பிரித்தானியாவின் சிவப்பு எச்சரிக்கை - தாக்க தயாராகும் புடின்!
|
|