இரண்டு மாதங்களில் 67 பேர் புகையிரதத்துடன் மோதி உயிரிழப்பு!

நாட்டில் கடந்த 2 மாதங்களில் மட்டும் சுமார் 67 பேர் ரயில் விபத்துக்களில் இறந்துள்ளதாக இலங்கை ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இறந்த 67 பேரில் பெரும்பாலானவர்கள் ரயில் பாதையில் நடந்து சென்றவர்கள் எனவும் கூறியுள்ளது.
இதேவேளை, கடந்த வருடத்தில் ரயிலில் மோதி 570 பேர் உயிரிழந்துள்ளனர். ரயில் பாதையில் பயணிப்பதானது, ரயில்வே திணைக்களத்தின் சட்டத்தின்படி தண்டனைக் குரிய குற்றமாகும்.
இதனால் ரயில் பாதையில் பயணிப்பதைத் தவிர்க்குமாறும் ரயில்வே திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது. பெரும்பாலான கட்டடங்கள், தனியார் வகுப்புகள் ரயில் பாதையை அண்மித்து காணப்படுவதும், ரயில் விபத்துக்களுக்கான காரணம் என ரயில் பாதுகாப்பு அதிகாரி அனுர பிரேமரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.
Related posts:
சிறுவர்களுக்கு எதிரான வன்முறை அதிகரிப்பு - நாடு முழுவதும் சிறுவர் நீதிமன்றங்களை உருவாக்க துரித நடவட...
வெளிநாடு செல்வதற்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் முன்னெடுக்கப்படும் பி.சி.ஆர் பரிசோதனைகள் இடைநிறுத்த...
இலங்கையை தொடர்பாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது - இந்திய தூதரகம் விளக்கம்!
|
|