இரண்டு மாதங்களில் முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலை குறைவடையும் – இராஜாங்க அமைச்சர் டீ.பீ.ஹேரத் தெரிவிப்பு!

Saturday, July 8th, 2023

முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலை, எதிர்வரும் இரண்டு மாதங்களில் குறைவடையும் என கால்நடை வள இராஜாங்க அமைச்சர் டீ.பீ.ஹேரத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

நாட்டின் அன்றாட முட்டை தேவையை நிவர்த்தி செய்ய அரசாங்கத்தினால் முடியாதிருந்த நிலையில், தற்போது அந்த விடயத்தில் மாற்றத்தை காண முடிகிறது.

அன்றாடம் தேவையான 80 ஆயிரம் முட்டைகளை உள்நாட்டில் உற்பத்தி செய்ய முடியாத நிலையில், முட்டையை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை அரசாங்கத்துக்கு ஏற்பட்டதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.

இதேவேளை, அரசாங்கம் தற்போது, 2 லட்சம் மெற்றிக் டன் சோளத்தை இறக்குமதி செய்துள்ளது. எனவே, எதிர்காலத்தில் கால்நடை தீவனத்துக்கு தட்டுப்பாடு ஏற்படாது.

அத்துடன், சோளம் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 20 ஆயிரம் ரூபாய் வீதம் மானியம் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்தநிலையில் எதிர்காலத்தில் முட்டை மற்றும் கோழியிறைச்சியின் விலை குறைவடையும் என கால்நடை வள அபிவிருத்தி அமைச்சர் டீ.பீ. ஹேரத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: