இரண்டு நாள்கள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்தடைந்தார். ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் யோகோ கமிகாவா!
Saturday, May 4th, 2024
இரண்டு நாள்கள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் யோகோ கமிகாவா இலங்கை வந்தடைந்துள்ளார்.
இந்த விஜயத்தின்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரதமர் தினேஸ் குணவர்தன ஆகியோரை சந்தித்து ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் கலந்துரையாட உள்ளார்.
அத்துடன், ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் மற்றும் அவரது தூதுக் குழுவினர் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியுடன் உத்தியோகபூர்வ கலந்துரையாடல்களை நடத்தவுள்ளனர்.
இதன்போது, அவர் கொழும்பு துறைமுகத்துக்கான கண்காணிப்பு விஜயமொன்றையும் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அவரது இந்த விஜயத்தின் போது இருதரப்பு கடன் மறுசீரமைப்பு தொடர்பான இறுதி ஒப்பந்தம் குறித்தும் கலந்துரையாடப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது
Related posts:
மோட்டார் வாகனங்களுக்கான புதிய வாகன இலக்க தகடுகள் - மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் நாயகம்!
37 வருடங்கள் கடந்துவிட்ட தமிழினத்தின் பெருந்துயரம்!..
அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் வீழ்ச்சி!
|
|
|
வேலணை பிரதேச சபை உறுப்பினருக்கு கொலை அச்சுறுத்தல் – கூட்டமைப்பின் பிரதேச சபை உறுப்பினர் பொலிஸில் முற...
தேர்தல்தினம் குறித்த வர்த்தமானி ஓரிரு வாரங்களில் அச்சிடப்படும் - தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவிப்பு!
மின் கட்டணத் திருத்தம் தொடர்பில் பொதுமக்களின் கருத்தைப் பெறுவதற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்கு...


