இரண்டு கொரோனா தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்டவர்களின் நோய் எதிர்ப்பு திறன் குறித்து ஆராய நடவடிக்கை!

Friday, August 13th, 2021

கொரோனாவிற்கு எதிராக இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்டவர்களின் நோய் எதிர்ப்பு திறன் குறித்து ஆராய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நோய் எதிர்ப்பு சக்தி காணப்படக்கூடிய கால எல்லை, அதன் தன்மை உள்ளிட்ட விடயங்கள் ஆய்வு செய்யப்படவுள்ளதாக ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நிர்ப்பீடனம், உயிரணு தொடர்பான கற்கை நிறுவனத்தின் தலைவர் கலாநிதி சந்திம ஜீவந்தர குறிப்பிட்டுள்ளார்.

அஸ்ராசெனிக்கா மற்றும் சினோபார்ம் தடுப்பூசிகளை முழுமையாக பெற்றுக் கொண்டவர்களூடாக இந்த ஆய்வுகளை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் குறித்த ஆய்வுகளுக்கு தேவையான மாதிரிகள் பெறப்பட்டுள்ளதாகவும் கொரோனாவிற்கு எதிராக முதல் இரண்டு தடுப்பூசிகளும் ஏற்றப்பட்டதன் பின்னரே மூன்றாவது தடுப்பூசி குறித்து தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முதல் இரண்டு தடுப்பூசிகளின் செயற்றிறனின் பெறுபேறுகளுக்கு அமையவே மூன்றாவது தடுப்பூசி குறித்து சிந்திக்க வேண்டும் எனவும் கலாநிதி சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000   

Related posts: