இரண்டாவது மீளாய்வை நிறைவு செய்வதன் மூலம், இலங்கை அதன் கடன் வழங்குனர்களுடனான ஒப்பந்தத்தை எட்டும் – சர்வதேச நாணய நிதியம் தெரிவிப்பு!

Friday, April 5th, 2024

இரண்டாவது மீளாய்வை நிறைவு செய்வதன் மூலம், இலங்கை அதன் கடன் வழங்குனர்களுடனான ஒப்பந்தத்தை எட்டும் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

அதேநேரம், இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வரும் பொருளாதார கொள்கை சீர்த்திருத்தம் தற்போது பலனளிக்க தொடங்கியுள்ளதாகவும், சர்வதேச நாணய நிதிய தொடர்பாடல் திணைக்களத்தின் பணிப்பாளர் ஜூலி கோஷாக் தெரிவித்துள்ளார்.

விரைவில் பணவீக்கம் குறைந்தமை, வலுவடையும் கையிருப்பு, பொருளாதார வளர்ச்சியின் ஆரம்ப அறிகுறிகள் என்பன பாராட்டுக்குரிய விளைவுகளாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கணிசமான நிதி சீர்திருத்தங்களைத் தொடர்ந்து பொது நிதிகள் வலுப்பெற்றுள்ளன, மேலும் இந்த சீர்திருத்த வேகம் தொடர வேண்டியது மிகவும் முக்கியமானது எனவும் அவர் வொஷிங்டனில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

கடன் மறுசீரமைப்பின் ஒரு பகுதியான உள்நாட்டுக் கடன் செயற்பாடுகள் பெரும்பாலும் நிறைவடைந்துள்ளதாகவும், திட்ட அளவுருக்களுடன் இணக்கமான வணிகக் கடன் வழங்குநர்களுடன் ஒப்பந்தங்கள் இரண்டாவது மதிப்பாய்வை நிறைவு செய்வதன் மூலம் எட்டப்படும் என்ற வலுவான எதிர்பார்ப்பு இருப்பதாகவும் சர்வதேச நாணய நிதிய தொடர்பாடல் திணைக்களத்தின் பணிப்பாளர் ஜூலி கோஷாக் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: