இரணைமடு திட்டத்தை கைவிடும் எண்ணமில்லை: நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தாவின்  கேள்விக்கு  அமைச்சர்  ரவூப் ஹக்கீம் சபையில் விளக்கம்!

Friday, June 10th, 2016

யாழ். குடா­நாட்­டுக்கு இர­ணை­மடு குளத்­தி­லி­ருந்து நீரைக் கொண்டு செல்லும் திட்­டத்தை கைவிடும் எண்ணமில்லையென நீர் வழங்கல் மற்றும் வடிகால­மைப்பு அமைச்சர் ரவூப் ஹக்கீம் சபையில் உறு­தி­யாகத் தெரிவித்துள்ளார்.

நாடாளு­மன்றில் நேற்று வியா­ழக்­கி­ழமை ஈழ­மக்கள் ஜன­நா­யகக் கட்­சியின் செய­லாளர் நாய­கமும் யாழ். மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான டக்ளஸ் தேவா­னந்தா 23 இன் கீழ் இரண்டில் யாழ். மாவட்ட குடிநீர்ப் பிரச்­சினை இரணை­மடு குள நீரை யாழ். குடா­நாட்­டுக்கு கொண்டு செல்­வதில் காணப்­படும் பிரச்­சி­னைகள், பூந­கரி குளங்­களை ஒருங்­கி­ணைத்தல், கடல் நீரை நன்­னீ­ராக்கும் திட்டம் ஆகி­யன தொடர்­பாக விசேட கூற்றை முன்­வைத்­தி­ருந்தார். அதற்கு பதி­ல­ளிக்­கை­யி­லேயே அமைச்சர் ரவூப் ஹக்கீம் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்திருந்தார்.

அவர் மேலும் கூறு­கையில் –

அண்­மையில் கிளி­நொச்சி மாவட்ட செய­ல­கத்தில் யாழ். குடா­நாட்­டுக்கு தேவை­யான நீரை இரணை­மடு குளத்திலிருந்து பெற்­றுக்­கொ­டுத்தல், கிளி­நொச்சி மாவட்ட விவ­சா­யிகள் எதிர்கொள்ளும் பிரச்­சி­னைகள் தொடர்­பாக நீண்ட கலந்­து­ரை­யாடல் ஒன்றில் ஈடு­பட்­டி­ருந்தோம்.

இதன்­போது கிளி­நொச்சி மாவட்ட நாடாளு­மன்ற உறுப்­பி­னர்கள், மாகாண சபை உறுப்­பி­னர்கள், சிவில் அமைப்புக்களின் பிர­தி­நி­திகள், அமைச்சின் அதி­கா­ரிகள் ஆகியோர் பங்­கேற்­றி­ருந்­தனர்.

நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள், மாகாண சபை உறுப்­பி­னர்கள் இர­ணை­மடு குள­நீரைக் கொண்டு செல்வ­தற்கு எதிர்ப்புக்களை வெளி­யிட்­டி­ருந்­தனர். அதே நேரம் விவ­சா­யி­களும் எதிர்ப்­புக்­களை வெளி­யிட்­டி­ருந்­தனர். அது தொடர்பி­லான மாற்று வழிகள் தொடர்­பா­கவும் நாம் கவனம் செலுத்தியிருந்தோம்.

இர­ணை­மடு செயற்­றிட்­டத்தை முன்­னெ­டுக்கும் ஆசிய அபி­வி­ருத்தி வங்கியின் அதி­கா­ரி­க­ளுடன் அண்­மையில் எனது அமைச்சில் கலந்­து­ரை­யா­டி­யி­ருந்தேன். இர­ணை­மடு குளத்­து­ நீரை யாழ். குடாநாட்­டுக்கு கொண்டு செல்லும் திட்டத்தை கைவிடும் எண்­ண­மில்லை. எனினும் தற்­கா­லிக குடிநீர் தேவையை பூர்த்தி செய்­வ­தற்கு இடைக்­கால தீர்வாக கடல் நீரை நன்­னீ­ராக்கும் செயற்றிட்டம் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றது.

ஆனால் இத்­திட்­டத்தால் மீனவர் குடும்­பங்­க­ளுக்கு பிரச்­சி­னைகள் ஏற்­ப­டு­வ­தாக கூறப்­ப­டு­கின்­றது. ஆகவே சுற்­றாடல் அமைச்­சிடம் அது தொடர்­பாக ஆராய்ந்து அறி­விக்­கு­மாறு கோரிக்கை விடுக்கப்பட்­டுள்­ளது. அதே­போன்று கிளி­நொச்சி மாவட்ட விவ­சா­யி­க­ளு­டைய பிரச்­சி­னை­க­ளையும் கவ­னத்திற் கொண்டு அதற்­கு­ரிய தீர்­வுகள் குறித்தும் ஆராயப்படுகின்­றது.

அதன் அடிப்­ப­டையில் இர­ணை­மடு குள­நீரை யாழ். மாவட்­டத்­திற்கு கொண்டு செல்வதற்கு அனைவரையும் திருப்திப்படுத்தி உரிய நடவடிக்கைகளும் எடுக்கப்படும். அதேபோன்று பூநகரி குளங்களை ஒருங்கிணைத்து நீர்த்தேவைக்கு பயன்படுத்துவது குறித்து நீர்ப்பாசன திணைக்களத்தின் ஊடாக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்றார்.

Related posts: