இரட்டை பிரஜாவுரிமை தொடர்பில் எந்த மாற்றமும் கிடையாது – நீதியமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!

Tuesday, October 20th, 2020

20 ஆவது திருத்தத்தில் இரட்டை பிரஜாவுரிமை தொடர்பில் எந்த மாற்றத்தையும் மேற்கொள்வதில்லை என முடிவு செய்யப்பட்டுள்ளது.

எனினும் 20 ஆவது திருத்தத்தில் மூன்று மாற்றங்களை மேற்கொள்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது எனவும் நீதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் நீதியமைச்சர் இதனை நேற்று தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு ஜனாதிபதிக்கு வழங்கப்படும் அதிகாரம் அரச ஸ்தாபனங்களில் கணக்காய்வு, மற்றும் அவசர சட்ட மூலங்களை சமர்ப்பித்தல் தொடர்பான விடயங்களிலேயே அரசாங்கம் மாற்றங்களை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது.

நாடாளுமன்றம் தனது ஆயுட்காலத்தின் இரண்டரை வருடங்களை பூர்த்தி செய்த பின்னரே அதனை கலைக்க முடியும் என்ற திருத்தத்தை முன்னெடுக்கவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அரச ஸ்தாபனங்களில் கணக்காய்வினை மேற்கொள்வதை 19வது திருத்தத்தின் அடிப்படையிலேயே முன்னெடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

எனினும் இரட்டை பிரஜாவுரிமையை கொண்டுள்ளவர்கள் தேர்தலில் போட்டியிட அனுமதிப்பது என்ற முடிவில் மாற்றங்கள் இல்லை என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts:

செம்மணி நிலப்பகுதியில் மேற்கொள்ள எதிர்பார்த்துள்ள அபிவிருத்தி செயற்பாடுகள் தொடர்பில் வட மாகாண ஆளுநர்...
சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்காக தன்னியக்க தொடர்பு கட்டமைப்பு அறிமுகம் - ,மோட்டார் வாகன போக்குவரத்து த...
உத்தேச நாடாளுமன்ற தர நிலை சட்டமூலம் அமுல்படுத்தப்பட்டவுடன் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு தகுதியற்றவ...