இரட்டைக் குடியுரிமை உள்ளவர்கள் யார் என்பதைக் கண்டறிய சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனல் நடவடிக்கை!
Thursday, October 27th, 2022
22 ஆவது அரசியலமைப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் நாடாளுமன்றத்தில் இரட்டைக் குடியுரிமை உள்ளவர்கள் யார் என்பதைக் கண்டறிய சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவினால் 225 நாடாளுமன்ற உறுப்பினர்களின் பட்டியல் குடிவரவு குடியகல்வு திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி கடந்த சில நாட்களாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் இது தொடர்பில் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
இந்த விசாரணையில், தேசியப்பட்டியல் மூலம் நாடாளுமன்றத்திற்கு வந்தவர் இரட்டைக் குடியுரிமை பெற்றவர் என குடிவரவு குடியகல்வு திணைக்களம் அடையாளம் காட்டியுள்ளதாக தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது..
000
Related posts:
பெண்கள் குழந்தைகள் தொடர்பில் விசேட அவதானம் தேவை - ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ!
மலையகத்தில் கடும் மழை - நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு – மக்களுக்கு கடும் எச்சரிக்கை!
மோசமான பொருளாதார நிலைமை காரணமாகவே வடக்கு, கிழக்கில் உள்ள மக்கள் நாட்டைவிட்டு வெளியேறுகின்றனர் – அமைச...
|
|
|


