இயல்பு வாழ்க்கை வழமைக்கு திரும்பினாலும் மக்களின் செயற்பாடுகள் திருப்திகரமாக இல்லை – பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவிப்பு!

மக்களின் இயல்பு வாழ்க்கை வழமைக்கு திரும்பி இருந்தாலும் மக்களின் செயற்பாடுகள் தொடர்பில் திருப்தி அடைய முடியாதுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
மக்கள் எந்தளவு அறிவுடையவர்களாக இருப்பினும் முடக்கநிலை தளர்த்தப்பட்ட நேற்றைய நாளில் அவர்கள் நடந்துகொண்ட விதம் திருப்தி அடையும் வகையில் இருந்திருக்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
சமூக இடைவெளியை பேணுவதில் மக்கள் நேற்றைய தினத்தில் முழுமையான அக்கறை காட்டவில்லை எனவும் வாகன போக்குவரத்தின் போதும் பல பிரச்சினைகள் ஏற்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இன்றையதினத்தில் மேற்குறித்த விடயங்களை நடைமுறைப்படுத்த கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்காக சிவில் உடைகளில் பொலிஸார் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஜனாதிபதி சீஷெல்ஸ் விஜயம்!
2022 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் நிதி அமைச்சர் பசில் ராபக்ஷ நாடாளுமன்றத்தில் முன்வைப்பு!
நாட்டிற்கு வருகைதரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை கடந்த சில மாதங்களாக அதிகரிப்பு - இலங்கை சுற்றுலா அப...
|
|