இயற்கை அனர்த்தங்களால் 45 மாணவர்கள் உயிரிழப்பு: 146 பாடசாலைகள் சேதம்!

இயற்கை அனர்த்தங்களால் நாட்டில் 146 பாடசாலைகள் சேதமடைந்துள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. சப்ரகமுவ மாகாணத்திலேயே அதிக பாடசாலைகள் வௌ்ளம் மற்றும் மண்சரிவால் சேதமடைந்துள்ளன.சப்ரகமுவ மாகாணத்தில் 65 பாடசாலைகள் சேதமடைந்துள்ளதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
மேல் மாகாணத்தில் 64 பாடசாலைகளும், தென்மாகாணத்தில் 17 பாடசாலைகளும் சேதமடைந்துள்ளன.இதேவேளை, பாதிக்கப்பட்ட மக்கள் 77 பாடசாலைகளில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டது.
வௌ்ளம் மற்றும் மண்சரிவினால் 45 பாடசாலை மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.சப்ரகமுவ மாகாணத்தில் 18 மாணவர்களும், மேல் மாகாணத்தில் 17 பாடசாலை மாணவர்களும், தென் மாகாணத்தில் 10 மாணவர்களும் உயிரிழந்துள்ளனர்.
8 மாணவர்கள் இயற்கை அனர்த்தங்களால் காணாமற்போயுள்ளனர்.இதேவேளை, பாதிக்கப்பட்ட மாணவர்களின் உளநலத்தை மேம்படுத்துவதற்கான ஆலோசனை சேவைகளை ஆரம்பிக்குமாறு கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் ஆலோசனை வழங்கியுள்ளார்.
Related posts:
|
|