சுயாதீனமாக செயற்பட தீர்மானித்த சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இராஜாங்க அமைச்சராக பதவிப் பிரமாணம்!
Tuesday, April 12th, 2022
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார, கரிம உரங்களின் உற்பத்தி மற்றும் விநியோகத்தை ஒழுங்குபடுத்தும் இராஜாங்க அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.
அவர் நேற்று திங்கட்கிழமை பதவிப் பிரமாணம் செய்துகொண்டாரென ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
அண்மையில் நாடாளுமன்றில் சுயாதீனமாக செயற்பட தீர்மானித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் சாந்த பண்டாரவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
தரம் ஒன்று மாணவர்களை சேர்ப்பதற்கு விண்ணப்பங்கள் கோரல்!
நாட்டில் வேலையின்மை வீதம் முதல் காலாண்டில் 4.3 வீதமாக குறைந்தது - சனத்தொகை மற்றும் புள்ளிவிபரத் திணை...
யாழ் - கிளி தேர்தல் மவட்டத்தில் 396 வேட்பாளர்கள் களத்தில் - இரு சுயேச்சை குழுக்கள் நிராகரிப்பு!
|
|
|


