இயக்கச்சியில் கோர விபத்து – இரு சகோதரிகள் பரிதாபப் பலி!
Saturday, July 28th, 2018
இயக்கச்சிப் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் இரு சிறுமிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்..இச்சம்பவம் நேற்று இரவு 10 மணியளவில் பளை – இயக்கச்சி பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது-
வடமராட்சி கிழக்கு வத்தராயன் கிராமத்தை சேர்ந்த சுபாஸ்கரன் தமிழினி வயது 10 சுபாஸ்கரன் சுபாசினி வயது 4 ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.
கிளிநொச்சியிலுல் ஆலயமொன்றிற்கு பொற்றுறோருடன் மோட்டார் சைக்கிளில் சென்று வீடு திரும்பும் போது ஏற்பட்ட வாகன விபத்திலேயே இவர்கள் இறந்ததாக தெரியவருகின்றது.
சிறுமிகளின் பெற்றுறோர் படுகாயங்களுக்குள்ளான நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் தொர்பான விசாரணைகளை பளைப்பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts:
20 ஆம் திகதியின் பின்னர் காலநிலையில் மாற்றம் - வளிமண்டலவியல் திணைக்களம்!
அரச தலைவரின் சிம்மாசன உரையுடன் எதிர்வரும் 18 ஆம் திகதி கூடுகிறது இந்த ஆண்டுக்கான முதல் நாடாளுமன்றம் ...
40 பயணிகளுடன் சென்ற தனியார் பேருந்து தீப்பிடித்தது எரிந்து நாசம் - உயிர்ச்சேதம் ஏற்படவில்லை என தெரிவ...
|
|
|


