இம்முறை 27,603 மாணவர்களுக்கு பல்கலைக்கழகம் செல்லும் வாய்ப்பு!

இம்முறை 27,603 மாணவர்களுக்கு பல்கலைக்கழகம் செல்லும் வாய்ப்பு கிட்டியுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கடந்த வருடத்தைவிட இம்முறை பல்கலைக்கழக அனுமதியில் 10 வீத அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக இதன் தலைவர் மொஹான் த சில்வா தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, 2015ஆம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சைக்கு தோற்றி சித்தி பெற்ற மாணவர்களின் பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள்இன்று வெளியிடப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஆஸி. பிரதமரை சந்தித்தார் ஜனாதிபதி!
முன்னாள் சிரேஷ்ட காவற்துறை மா அதிபர் விபத்தில் பலி!
நாளை மாலை 5 மணிக்கு முன் காலி முகத்திடலை விட்டு வெளியேறவேண்டும் -போராட்டக்காரர்களுக்கு பொலிஸார் உத்த...
|
|