இம்மாத இறுதிக்குள் 18 முதல் 30 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்க நடவடிக்கை – சுகாதார அமைச்சு தகவல்!

18 வயதிற்கும் 30 வயதிற்கும் இடைப்பட்டவர்களுக்கு இம்மாத இறுதியில் முதலாவது தடுப்பூசி செலுத்தப்படவுள்ளதாக அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் தலைவர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.
அத்துடன் நாட்டில் 30 வயதிற்கு மேற்பட்டவர்களுள் 96 வீதமானோருக்கு கொரோனா தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தும் பணி நிறைவடைந்திருப்பதாகவும் தெரிவித்த அவர், இவர்களுக்கு இரண்டாவது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையும் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதேநேரம் எதிர்வரும் சில தினங்களில் மேலும் பெருந்தொகை தடுப்பூசி நாட்டிற்கு கிடைக்கவுள்ளதாகவும் தெரிவித்த அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் தலைவர் இதனடிப்படையில் 18 வயதிற்கும் 30 வயதிற்கும் இடைப்பட்டவர்களுக்கு இம்மாத இறுதியில் முதலாவது தடுப்பூசி செலுத்தப்பட நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்திரந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை
இலங்கையின் மொத்த சனத்தொகையில் 30 வயதிற்கு மேற்பட்ட 95 சதவீதமானோருக்கு ஏதேனும் ஒரு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.
நாட்டின் தடுப்பூசி வழங்கல் பணிகள் தொடர்ந்தும் விரைவாக முன்னெடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய, 30 வயதிற்கு மேற்பட்ட 95 சதவீதமானோருக்கு குறைந்த பட்சம் ஏதேனும் ஒரு தடுப்பூசியின் முதலாம் மாத்திரையாவது வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|