இம்மாத இறுதிக்குள் தேசிய பாடசாலை அதிபர்களுக்கான வெற்றிடம் பூர்த்தி!

Thursday, January 3rd, 2019

தேசிய பாடசாலைகளில் காணப்படும் அதிபர்களுக்கான வெற்றிடம் இம்மாத இறுதிக்குள் பூர்த்தி செய்யப்படுமென கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் 302 தேசிய பாடசாலைகளில் பதில் அதிபர்களே சேவையில் உள்ள நிலையில், குறித்த பாடசாலைகளுக்கு அதிபர்களை நியமிப்பதற்கான நேர்முக பரீட்சைகள் நிறைவடைந்துள்ளதாக கல்வியமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய நேர்முக பரீட்சையில் தெரிவு செய்யப்பட்டவர்களின் பெயர்ப்பட்டியல் எதிர்வரும் 10ஆம் திகதிக்கு முன்னர் அரச சேவை ஆணைக்குழுவுக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதாக கல்வியமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts: