இம்மாத இறுதிக்குள் சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் – பரீட்சைத் திணைக்களம் அறிவிப்பு!
Friday, April 16th, 2021
நடைபெற்று முடிந்த கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படவுள்ள தினம் குறித்த அறிவிப்பை பரீட்சைத் திணைக்களம் வெளியாகியுள்ளது.
இதற்கமைய இந்த மாத இறுதியில் குறித்த பெறுபேறுகளை வெளியிட எதிர்பார்த்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கான இறுதிக் கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
இதேவேளை, பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டு, மூன்று மாத காலப் பகுதிக்குள் பல்கலைக்கழக பிரவேசத்திற்கான வெட்டுப்புள்ளிகளை வெளியிட எதிர்பார்க்கப்படுவதாகவும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தகவல் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
தேசிய டெங்கு ஒழிப்பு வாரம் 03 தினங்களுக்கு வரையறை!
அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் - நெதர்லாந்து தூதுவர் இடையே விசேட சந்திப்பு!
தேர்தல் முரண்பாடுகள் தொடர்பான அனைத்து தகவல்களையும் மக்களுக்கு தெரிவிக்கும் வேலைத்திட்டம் - தேர்தல்கள...
|
|
|


