இன, மத நல்லிணக்கத்தை சிதையாது பாதுகாத்து வருபர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா -மனித உரிமை ஆணைக்கு குழுவின் ஆணையாளர் திருமதி பற்குணராஜா சுட்டிக்காட்டு!

Friday, March 12th, 2021

தேசிய நல்லிணக்கத்தையும் மத நல்லிணக்கத்தையும் ஆரம்பித்த காலத்திலிருந்து இன்றுவரை கட்சியின் கொள்கையூடாக முன்னெடுப்பதுடன் அது சிறிதளவேனும் பாதிக்கப்பட கூடாது என்பதில் மிகுந்த அக்கறையுடன் தமிழ் மக்களை சிறந்த முறையில் வழிநடத்திக் கொண்டிருப்பவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் முக்கியஸ்தரும் யாழ் மாநகரின் முன்னாள் முதல்வரும்  மனித உரிமைகள் ஆணைக்குளுவின் ஆணையாளருமான திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா சுட்டிக்காட்டியுள்ளார்.

சிவராத்திரி தினத்தையும் உடுவில் குபேரகா கலை மன்றத்தின் 7 ஆவது ஆண்டு நிறைவு தினத்தையும் முன்னிட்டு சமூக சேவையாளர்களை கௌரவிக்கும் நிகழ்வொன்றை குறித்த மன்றம் நேற்றையதினம் மேற்கொண்டிருந்தது. இதில் சிறப்பு அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தள்ளார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில் –

இன்றைய அரசியல் வாதிகளில் அதிகமானோர் தமது தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களை  அமுல்படுத்தவதற்கான களமாக இனத்தையும் மதத்தையும் பயன்படுத்திவருகின்றார்கள்.

ஆனால் ஈழமக்கள் ஜனநாயக கட்சியும் தன் தலைவரான டக்ளஸ் தேவானந்தாவும் “இனம்” ஒற்றுமையாகவும் “மதம்” நல்லிணக்கமாகவும் இருக்கவேண்டும் என்றே வலியுறுத்தி தனது செயற்பாட்டட் முன்னெடுத்துவருகின்றது. அதுமட்டுமல்லாது கட்சியின் ஒவ்வொரு சொலினூடாகவும் அது தொடர்பான கருத்துக்களை மக்களுக்கு கூறி மக்களை நல்வழியில் வளர்த்துடுத்தும் வருகின்றது.

அதேநேரம் இன்றைய காலகட்டத்தில் மத நல்லிணக்கம் மிகவும் முக்கியமானதொன்றாகும். கடந்த சில வருடங்களுக்கு முன்னர் இதே இந்நாளில் மன்னாரில் இந்து மத்ததையும் கிருஸ்தவ மதத்தையும் மொதிக்கொள்ளும் வகையில் செயற்பாடுகளை ஒருசிலர் தத்தமது  தேவைகளுக்காக மேற்கொண்டிருந்தனர். இது ஒரு வருந்தத்தக்க செயலாக அமைந்துள்ளது.

தென்னானுடைய சிவன் ஒருபோது மதங்கள் மோதிக்கொள்வதை ஏற்றுக்கொள்ளமாட்டார். வடக்கிலிருந்து தென்திசை நோக்கி அனைத்து மதங்களுக்கும் ஒளிப்பிளம்பாக தோன்றி அனைத்து மதங்களையும் ஒன்றிணைத்த கடவுளர் சிவன்.

அதேநேரம் எமது நாட்டில் வடக்கு மாகாணத்தில் இந்து மதமும் கிறிஸ்தவ மதமும் பின்னிப் பிணைந்ததொன்றாகவே காணப்படுகினக்றது. இரு சமயங்களும் தத்தமது  நெறிமுறைகளை  தத்தமது மதங்களை பின்பற்றுபவர்களுக்கு போதிக்கின்றன. அதனூடான அன்பையே வலியுறுத்துகின்றன.

ஆனாலும் இந்த பிணைப்பை ஒருசில அரசியல்வாதிகள் சீரழிக்க முற்படுகின்றனர். இதற்கு எமது மக்கள் இடம் கொடுக்ககூடாது என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது.

அந்தவகையில் இன்று இந்த குபேரகா கலைமன்றம் முன்னெடுத்து நடத்துகின்ற இந்த நிகழ்வானது  வடக்கின் சமூக சேவையாளர்கள் மற்றும் கலைஞர்களையும் தெற்கின் சகோதர கலைஞரர்களையும் மதம் சார்ந்தவர்களையும் ஒன்றிணைத்து இன மத நல்லிணக்கத்தை வலுப்படுத்துவதாக இருப்பது இன மற்றும்  மத நல்லிணக்கத்திற்கு சிறந்தொரு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

அதுமட்டுமல்லாது ஒருவர் வாழும் போதே அவரது சேவைகள் கருதி கௌரவிக்கப்பட வேண்டும். அது அவசியமானதொன்று. இளமையில் பெறும் ஆரவாரிப்பு ஓய்வு நிலையில் இருக்கும் போது கிடைப்பதில்லை. அந்த இடைவெளியை இந்த குபேராக கலைமன்றம் மேற்கொள்வது பாராட்டப்பட வேண்டியது என்றும் அவர் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்து.

இதேநேரம்’ உடுவில் குபேரகா கலை மன்றம் தனது 7 ஆவது ஆண்டு நிறைவு தினத்தை முன்னிட்டு சமூக சேவை மேற்கொண்டு வாழ்ந்துகொண்டிருப்பவர்களை திரட்டி கௌரவித்து விருதுகளை வழங்கியுள்ளது.

மக்கள் மத்தியில் பலர் பல்வேறு சமூக சேவைகளை மேற்கொண்டுவந்தாலும் அவர்கள் பலர் கௌரவிக்கப்படுவதில்லை. அவ்வாறு அரசாங்கத்தால் கௌரவிக்கப்பட்டாலும் அது 60 வயதை தாண்டிய ஓய்வு நிலைக் காலத்திலும் சிலருக்கு மரணத்தின் பின்னரும் தான் கிடைக்கப்பெறும் சூழ்நிலை காணப்படுகின்றது.

இந்நிலையில் சமூகத்தில் மக்களுக்கான சேவையையும் குறிப்பாக கலைத்துறை மற்றுமு; மக்கள் சேவை ஆகியவற்றை முன்னெடுக்கும் பரது தகவல்களை திரட்டி அவர்கள் மேற்கொள்ளும் சமூக சேவையை கௌரவிக்கும் முகமாக இந்த கௌரவிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வருடா வருடம் வழங்கப்பட்டுவரும் இந்த கௌரவிப்பில் இம்முறை ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானதாவுக்கு அவரது எண்ணற்ற மக்கள் சேவைகள் தியாங்களை முன்னிறுத்தி  மக்கள் திலகம் என்னும் மகுடம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம்’ கட்சியின் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் முக்கியஸ்தரும் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளருமான யாழ் மாநகரின் முன்னாள் முதல்வருமான திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா அவர்களுக்கு “சமூக திலகம் எனும் சிறப்பு பட்டத்தையும் வழங்கி கெளரவித்துள்ளது

இதேவேளை குறித்த கௌரவிப்பு நிகழ்வில் தேர்ந்தெடுக்கப்பட்ட 100 சமூக சேவையாளர்களுள் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் சிலருக்கும் சமூக ஜோதி பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: