இன்று வொக்ஸ்வோகன் தொழிற்சாலைக்கான அடிக்கல் நாட்டும் விழா !

Tuesday, January 3rd, 2017
ஜெர்மனியின் வொக்ஸ்வோகன் மோட்டார் வாகன உற்பத்தி நிறுவனத்தின் தொழிற்சாலை இலங்கையில் அமைக்கப்படவுள்ளது. இதற்குரிய அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெறவள்ளது. பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர் அக்கில விராஜ காரியவசம் ஆகியோரும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவுள்ளனர்.

இந்தத் திட்டத்தின் மூலம் 3 ஆயிரம் பேருக்கு நேரடித் தொழில் வாய்ப்புக்களும் பத்தாயிரம் பேருக்கு வேறு வழியிலான வேலைவாய்ப்புக்களும் உருவாகின்றன. குறித்த தொழிற்சாலையில் இருந்து ஆயிரம், இரண்டாயிரம் வலுவுடைய மோட்டார் கார்களும் பல்நோக்கு மற்றும் வணிக வாகனங்களும் தயாரிக்கப்படும்.

குளியாப்பிட்டியின் லபுயாய – மஹா-நுகலகந்த பிரதேசத்தில் அமைந்துள்ள 50 ஏக்கர் காணியில் வொக்ஸ்வோகன் தொழிற்சாலை நிறுவப்படும்.

பிரதமரின் எண்ணக்கருவிற்கு ஏற்ப வொக்ஸ்வோகன் தொழிற்சாலை இலங்கையில் நிறுவப்படுகிறது. இது முதலீட்டுச் சபைத் திட்டமாக அமுலாக்கப்படும். இதற்காக 2 கோடி 65 இலட்சம் அமெரிக்க டொலரகளுக்கும் மேற்பட்ட தொகை முதலீடு செய்யப்படுகிறது.

வொக்ஸ்வோகன் தொழிற்சாலைக்காக இலங்கையின் செனொக் நிறுவனம், வொக்ஸ்வோக்கனுடன் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளது. இதில் வெஸ்டேர்ன் ஒட்டோ மொபைல் அசம்பிளி தனியார் நிறுவனமும் இணைந்துகொள்ளும் என தெரிவிக்கப்படுகின்றது

z_pi-Volkswagen

Related posts: