இன்று பிற்பகல் மழைபெய்ய வாய்ப்பு – வளிமண்டலவியல் திணைக்களம்!

Thursday, December 6th, 2018

வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட கீழ் வளிமண்டல தளம்பல் நிலை காரணமாக நாட்டில் தற்போது காணப்படும் மழையுடன் கூடிய காலநிலை அடுத்த சில நாட்களுக்கும் தொடரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

ஏனைய பிரதேசங்களில் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மத்திய, கிழக்கு, ஊவா, சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் 100 மில்லி மீட்டர் அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

மத்திய சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனி மூட்டம் காணப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்

Related posts:

வறட்சியால் வெங்காய பயிர்ச் செய்கை முற்றாக பாதிப்பு - வங்கிக்கடன் செலுத்தமுடியாது விவசாயிகள் திண்டாட்...
புகையிரதங்களில் நெரிசலை குறைக்கும் நோக்கில் இந்தியாவிலிருந்து 160 புகையிரத பெட்டிகளை கொள்வனவு - புகை...
இந்திய முதலீட்டாளர்கள் குழு அமைச்சர் டக்ளஸ் சந்திப்பு - நண்டு வளப்பில் வருமானத்தை அதிகரிக்கச் செய்யு...