இன்று நாட்டில் பல பாகங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும்!

Monday, October 17th, 2016

இன்று நாட்டில் பல பாகங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

நேற்றைய (16) தினமும் நாட்டின் பல பாகங்களுக்கும் மழை பெய்துள்ளது. சில பகுதிகளுக்கு 50 முதல் 100 மில்லி மீட்டர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.இடி மின்னலுடன் மழை ஆரம்பிக்கும் போது வேகமாக காற்று வீசும் எனவும் திணைக்களம் கூறியுள்ளது.

நாடு முழுவதும் நிலவி வரும் வறட்சியான காலநிலை முடிவுக்கு வந்துள்ளதாகவும், நேற்று முன்தினம் (15) முதல் மழையுடன் கூடிய கால நிலை ஆரம்பித்துள்ளதாகவும் திணைக்களம் மேலும் கூறியுள்ளது.

rain_1

Related posts: