இன்று நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஒழுக்ககோவை தாக்கல்!
 Saturday, December 10th, 2016
        
                    Saturday, December 10th, 2016
            நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக தொகுக்கப்பட்ட ஒழுக்கநெறிமுறை அமைப்பு இன்று சபாநாயகர் கரு ஜயசூரியவினால் பாராளுமன்றில் சமர்பிக்கப்பட உள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஒழுக்ககோவை முறை ஒன்று அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்று நீண்டகாலமாக யோசனைகள் முன்வைக்கப்பட்டு வந்தன.
அதன்படி பாராளுமன்ற சபாநாயகர் கரு ஜயசூரியவினால் இந்த ஒழுக்ககோவை முறையை விரைவாக அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவந்துள்ளது.
சட்டமா அதிபர் திணைக்களத்தின் சட்ட வரைஞர்களினால் இந்த ஒழுக்ககோவை தயாரிக்கப்பட்டிருப்பதாக சபாநாயகர் அலுவலகம் கூறியுள்ளது.
இந்த ஒழுக்ககோவை தயாரிக்கப்பட்டதன் பின்னர், நிலையியற் கட்டளை தொடர்பில் செயற்குழுவினால் ஆராயப்படும் என்று கூறப்படுகின்றது. இன்று பாராளுமன்றில் தாக்கல் செய்யப்பட உள்ள இந்த ஒழுக்ககோவை, எதிர்வரும் ஜனவரி மாதம் பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட உள்ளது.

Related posts:
தென்பகுதிக்கு ஏற்றுமதி செய்யப்படும் கடலுணவுகளின் தொகையில் வீழ்ச்சி!
தேசிய சிறுவர் தின வைபவம் - ஜனாதிபதி  பிரதமர் தலைமையில் இன்று!
சா/தர விசேட செய்முறைப் பரீட்சை இன்றும் நாளையும் முன்னெடுப்பு!
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        