இன்று நாடளாவிய ரீதியில் பொலிஸாருக்கு விசேட சத்தியப்பிரமாணம்!
Saturday, September 17th, 2016
நாடளாவிய ரீதியில் பொலிஸார் இன்று (17) விசேட சத்தியப்பிரமாணம் ஒன்றை செய்து கொள்ளவுள்ளனர்.
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவினால், பொலிஸாருக்காக உருவாக்கப்பட்டுள்ள ஒழுக்க விதிக் கோவையை பின்பற்றி நடப்பதாக சத்தியப்பிரமாணம் செய்யப்படவுள்ளது. இந்த ஒழுக்க விதிக் கோவை இன்று (17) காலை 9 மணியளவில் வெளியிடப்படவுள்ளது.
இதன்பிரகாரம் அனைத்து பொலிஸ் உத்தியோகத்தர்களும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் முன்னிலையில் இன்றைய தினம் சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் ஆரியதாச குரே தெரிவித்தார்.

Related posts:
தலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவம் பற்றிய தெளிவுபடுத்தும் திட்டம் ஆரம்பம்!
நாட்டின் பல பாகங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்- வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல...
தற்போதைய நெருக்கடியிலிருந்து நாட்டை விடுவிப்பதற்கான வழிமுறைகளை முன்வையுங்கள் - அமைச்சர் கலாநிதி பந்...
|
|
|


