இன்று சர்வதேச தாதியர் தினம் !

சர்வதேச தாதியர் தினம் இன்றாகும் (12). சுகாதார சேவையின் மகத்துவம் அன்றும் இன்றும் மிக முக்கிய சேவையாக ஒவ்வொருவருக்கும் அத்தியாவசியமாக காணப்படுகின்றது.
புளோரன்ஸ் நைட்டிங்கேல் (Florence Nightingale) அறிமுகப்படுத்திய தாதிச் சேவை, உலக உயிர்வாழ்விற்கான இன்றியமையாத காரணியாக அமைந்துள்ளமையே அதற்கான காரணமாகும்.
நவீன தாதியியல் முறையை உருவாக்கிய இங்கிலாந்தைச் சேர்ந்த Florence Nightingale-இன் பிறந்த நாளான மே 12 ஆம் திகதியை சிறப்பாக நினைவுகூரும் வகையில் இன்றைய நாளில் சர்வதேச தாதியர் தினம் அனுஷ்ட்டிக்கப்படுகின்றது.
1899ஆம் ஆண்டில் சர்வதேச தாதியர்களுக்கான பேரவை எடுத்த தீர்மானத்திற்கமைவாக ஆண்டு தோறும் மே மாதம் 12 ஆம் திகதியை சர்வதேச தாதியர் தினமாக கொண்டாடுகின்றோம்.
1939 ஆம் ஆண்டு முதல், முறையான தாதியர் சேவையை ஸ்தாபித்ததன் மூலம் நோயுற்றவர்களை இரவும் பகலும் கவனித்துக்கொள்ளும் தாதியர்களின் தலைமுறையை கௌரவிக்கும் வகையில் இலங்கையும் தாதியர் தினத்தை கொண்டாடுகின்றது.
தங்கள் உயிரை பணயம் வைத்து கொரோனா தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் தாதியர்கள் தமது உன்னத சேவையை நாட்டுக்கு வழங்கியமையை எம்மால் மறந்துவிட முடியாது.
கடமைக்கு அப்பாற்பட்ட மனிதாபிமானத்துடன் கூடிய இதயத்துடன், இந்த நாட்டிலுள்ள சுமார் 36,000 தாதியர்கள் ஓய்வின்றி தமது சேவையை தொடர்கின்றனர்.
நோயாளர்களை குணப்படுத்தி அவர்களை அரவணைத்து அவர்களுக்கு புத்துயிரளிக்கும் அளப்பரிய பணியை மேற்கொள்ளும் அனைத்து தாதியர்களையும் நாம் இந்நாளில் நினைவில் கொள்ளுவது அவசியமாகும்.
000
Related posts:
|
|