இன்று சர்வதேச குடிசன தினம்!

Monday, October 3rd, 2016
சர்வதேச குடிசன தினம் இன்றாகும். ஒவ்வொரு வருடமும் ஒக்டோபர் மாதத்தின் முதலாவது திங்கட்கிழமை உலக குடிசன தினமாக ஐக்கிய நாடுகள் சபையினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

30 வது சரவதேச குடிசன தினம் இம்முறை அனுஸ்டிக்கப்படுகின்றது. ‘வீட்டுத்திட்ட உதவிகளுக்கு முன்னுரிமை’ எனும் தொனிப்பொருளில் இம்முறை குடிசன தினம் அனுஸ்டிக்கப்படுகின்றது.

சர்வதேச குடிசன தினத்தினையொட்டிய தேசிய நிகழ்வுகள் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் பொலன்னறுவை சுகலாதேவி கிராமத்தில் இடம்பெறவுள்ளது இன்று முதல் ஒரு வாரம் குடிசன வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது

1985 ம் ஆண்டு ஜமெய்க்காவில் வைத்து அப்போதைய இலங்கைப் பிரதமர் ரணசிங்க பிரேமதாஸ முன்மொழிந்திருந்த யோசனையே உலக குடிசன தினம் பிரகடனப்படுத்தப்பட ஏதுவாக அமைந்ததாக தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் லக் விஜய சாகர கலன்சூரிய தெரிவித்தார். இதேவேளை தற்போது தேசிய ரீதியில் 12 இலட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு வீட்டுத் தேவை நிலவுவதாக அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன. மொத்த வீடமைப்பு கேள்வித் தொகையில் 20 வீதமானோர், வீடின்றி வாழ்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

world-habitat-day_31012

Related posts:

வடக்கிற்கு சிறந்த சேவையாற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கிழக்கையும் தூக்கி நிறுத்த வேண்டும் - அம்பா...
இறக்குமதி செய்யப்பட்ட அரிசியில் கன உலோகங்கள் இல்லை - பரிசோதனையில் தெரிய வந்துள்ளதாக சுகாதார அமைச்சு ...
டெங்கு நோயின் தாக்கம் அதிகரிப்பு - இதுவரையான காலப்பகுதியில் 23,731 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்...

வடக்கு கிழக்கின் ஹர்த்தால் அனுஷ்டிப்பு நாட்டின் பாதுகாப்புக்கு எவ்வகையிலும் அச்சுறுத்தலாக அமையவில்லை...
ஜனாதிபதி மற்றும் ஆளுங்கட்சி அமைச்சர்களுக்கு இடையில் நாளை விசேட சந்திப்பு - 21 ஆவது திருத்த சட்டமூலம்...
உடலால் உணரப்படும் வெப்பத்தின் அளவு கவனம் செலுத்தப்பட வேண்டிய மட்டத்தில் உள்ளது - வளிமண்டலவியல் திணை...