இன்று இந்தியாவின் 70வது சுதந்திர தினம்: நாடு முழுவதும் கோலாகலம்!

Monday, August 15th, 2016

இந்தியா தனது நாட்டின் 70வது சுதந்திர தினத்தை கொண்டாடும் நிலையில், தலைநகர் டெல்லி உள்ளிட்ட நாட்டின் ஒட்டுமொத்த பகுதியிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி, டெல்லி செங்கோட்டையில் இன்று மூவர்ணக் கொடியேற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார். இதில், மத்திய அமைச்சர்கள், உயர் அதிகாரிகள், வெளிநாட்டு தூதர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்துகொள்ள இருக்கிறார்கள். இதனை முன்னிட்டு, டெல்லி செங்கோட்டையில் பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஆயிரக்கணக்கான பொலிசார் மற்றும் கமான்டோ படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், தீவிரவாதத்துக்கு எதிராக உலக நாடுகள் ஒன்றிணைந்து போராட வேண்டும் என ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வலியுறுத்தியுள்ளார்.

இந்தியாவின் எழுபதாவது சுதந்திர தினத்தையொட்டி ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, தொலைக்காட்சியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் உரிய பாதுகாப்பு அளிக்காமல் நம்மை ஒரு நாகரிகமான சமுதாயம் என்று சொல்லிக்கொள்ள முடியாது என அவர் குறிப்பிட்டார்.

உலகம் முழுவதும் வேரூன்றியுள்ள தீவிரவாத சக்திகள் மதத்தின் பெயரால் மக்களைப் பிளவுபடுத்தி வருவதாகக் குறிப்பிட்ட அவர், தீவிரவாதத்துக்கு எதிராக உலகின் அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து போராட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

Related posts:

2011 ஆம் ஆண்டு சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் நடந்த சம்பவம் தொடர்பில் 8 பொலிஸாருக்கு யாழ். மேல் நீதிமன...
கொரோனா அச்சத்தால் முடக்கப்பட்ட அனலைதீவு ,காரைநகர் பிரதேசங்கள் முடக்கத்திலிருந்து விடுவிக்கப்பட்டன - ...
கடந்த நல்லாட்சி அரசின் காலத்தில் வாகன இறக்குமதியில் மோசடியில் மிகப்பெரும் மோசடி – நிதி இராஜாங்க அமை...