இன்றும் 220 நிமிட நேர மின்வெட்டு – இலங்கை மின்சார சபை தெரிவிப்பு!

Wednesday, May 18th, 2022

நாடளாவிய ரீதியில் இன்றும் 220 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படுவதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

அதற்கமைய, A முதல் L வரை மற்றும் P முதல் W வரையான வலயங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை 02 மணித்தியாலங்களும் மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை ஒரு மணித்தியாலம் 40 நிமிடங்களுக்கும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

இதனிடையே, வர்த்தக வலயங்களிலுள்ள பிரதேசங்களில் அதிகாலை 5 மணி முதல் காலை 8 மணி வரை 03 மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

00

Related posts: