இன்றும் மின்வெட்டு இல்லை – இலங்கை மின்சார சபை அறிவிப்பு!

Friday, April 15th, 2022

நாட்டில் இன்றையதினமும் மின்தடை அமுலாக்கப்படமாட்டாது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது

புத்தாண்டை முன்னிட்டு நேற்றுமுன்தினம்முதல் இன்றையதினம்வரை மின்தடை அமுலாக்கப்படமாட்டாது என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்திருந்தது.

நாளைய தினம் மின்தடை அமுலாக்கப்படுவது குறித்து இன்று கூடி தீர்மானம் மேற்கொள்ளப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

மின்உற்பத்தி நிலையங்களுக்கு தேவையான எரிபொருள் கிடைக்க பெற்றமை மற்றும் நீர்மின் உற்பத்தி நிலையங்களை அண்மித்த பகுதிகளில் பதிவாகும் மழை வீழ்ச்சி என்பனவற்றை கருத்திற் கொண்டு தீர்மானம் மேற்கொள்ளப்படும் என அந்த சபை குறிப்பிட்டுள்ளது.

00

Related posts:


நான்கு கட்டங்களாக பாடசாலைகளை ஆரம்பிக்க சுகாதார அமைச்சு உத்தியோகபூர்வமாக கல்வி அமைச்சுக்கு அறிவிப்பு ...
நாட்டின் நன்மைக்காக பிரபல்யமற்ற தீர்மானங்களை எடுக்க நேரிட்டுள்ளது - ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவ...
அரசதுறை ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்க நடவடிக்கை - திறமையற்ற அரசத்துறை ஊழியர்களுக்கு சுய ஓய்வு - அம...