இன்றும் ஐந்து மணி நேர மின்வெட்டு – இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவிப்பு!

Friday, February 25th, 2022

நாடளாவிய ரீதியில் இன்றும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது..

அத்துடன் இலங்கை மின்சார சபையின் கோரிக்கைக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி, A ,B மற்றும் C பகுதிகளில் 4 மணி நேரம் 40 நிமிடம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் அதேவேளை ஏனைய பகுதிகளில் 5 மணித்தி யாலங்களும் 15 நிமிடமும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மின் உற்பத்தி நிலையங்கள் இயங்க முடியாததால், வாரத்தின் தொடக்கத்திலிருந்து திட்டமிடப்பட்ட மின்வெட்டு விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

9 வயதுச் சிறுவனிடம் குளோரின் கரைக்க கொடுத்த சுகாதார உத்தியோகத்தர்கள் - விசாரணைகள் முன்னெடுக்கப்படுவத...
செப்ரெம்பர் மாதத்தின் பின்னர் நாட்டை முழுமையாக திறக்க நடவடிக்கை – அமைச்சரவையில் ஜனாதிபதி தெரிவிப்பு!
இலங்கை மக்களுக்கு தமிழக பொலிஸார் 1.40 கோடி நிதியுதவி – முதலமைச்சர் ஸ்ராலினிடம் காசோலையாக வழங்கிவைப்ப...