இன்றுமுதல் லிட்ரோ விநியோகம் வழமைக்கு திரும்புகிறது – லிட்ரோ நிறுவனம் அறிவிப்பு!

Friday, March 11th, 2022

சமையல் எரிவாயு விநியோகம் இன்று (11) முதல் வழமைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, சந்தையில் நிலவும் எரிவாயு தட்டுப்பாடுக்கு, எதிர்வரும் சில தினங்களுக்குள் தீர்வு கிடைக்கும் என்று லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் தெஷார ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

நாணயக் கடிதங்களை திறப்பதில் ஏற்பட்ட சிக்கல் நிலையால், கடந்த தினங்களில், சந்தையில் லிட்ரோ எரிவாயுவுக்கு தட்டுப்பாடு நிலவியது.

இந்த நிலையில், தொடர்ச்சியாக இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளின் பிரதிபலனாக, எரிவாயுவை விடுப்பதற்கான நாணயக் கடிதங்களைத் திறக்க அரச வங்கிகள் நேற்றிரவு இணங்கியுள்ளன.

இதன்படி, தற்போது நாட்டை வந்தடைந்துள்ள இரண்டு கப்பல்களில் உள்ள எரிவாயுவை தரையிறக்கும் பணிகளை ஆரம்பிப்பதுடன், நாளொன்றுக்கு, 80, 000 எரிவாயு கொள்கலன்களை சந்தைக்கு விடுவிக்கவும் லிட்ரோ நிறுவனம் தீர்மானித்துள்ளது.

எவ்வாறிருப்பினும், டொலர் பற்றாக்குறை காரணமாக, நாணயக் கடிதங்களைத் திறப்பதில் ஏற்பட்டுள்ள தாமதத்தினால், லாஃப்ஸ் நிறுவனம் தமது விநியோக நடவடிக்கைகளை தொடர்ந்தும் இடைநிறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


மோசடியாக முறையில் 1000ற்கு மேற்பட்ட மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றினர -  ராஜாங்க அமைச்சர்  இராதாகிருஸ...
வடக்கின் சுகாதார சேவை உயர் பதவிகளுக்கு புதிய நியமனங்கள் - பணிப்பாளராக பி.எஸ்.டி.பத்திரண சுகாதார அமை...
அரச நிர்வாக மட்டத்திலான அதிகாரிகள் தமக்கு வழங்கப்பட்ட வரியற்ற வாகன இறக்குமதி அனுமதிப் பத்திரங்களை வி...